ரெயில்வே தரைப்பாலத்தில் சிக்கிய அரசு பஸ்

நாட்டறம்பள்ளி அருகே ரெயில்வே தரைப்பாலத்தில் அரசு பஸ் சிக்கியது.

Update: 2023-06-09 18:00 GMT

திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து புதுப்பேட்டை வழியாக நாட்டறம்பள்ளி வரை அரசு பஸ் தினசரி இயங்கி வருகிறது. நேற்று வழக்கம் போல் பயணிகளை ஏற்றிக் கொண்டு நாட்டறம்பள்ளி நோக்கி அரசு பஸ் சென்றது. புதுப்பேட்டையை கடந்து வேட்டப்பட்டு கூட்ரோடு தண்டவாளத்திற்கு கீழ் உள்ள ரெயில்வே தரைப்பாலத்தில் நுழைந்தது. அப்போது பஸ்சின் மேல்பகுதி பாலத்தில் இடித்து கடந்து செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டது.

இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கிழே இறங்கினர். அதன் பிறகு டிரைவர் பஸ்சை மெதுவாக பின்னோக்கி இயக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு மாற்று வழியில் நாட்டறம்பள்ளி நோக்கி சென்றார்.

இதனால் இந்த வழியாகசிறிது நேரம்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்