மாதிரவேளூருக்கு அரசு பஸ் இயக்கம்

முதல் முறையாக வடரங்கத்தில் இருந்து மாதிரவேளூருக்கு அரசு பஸ் இயக்கம் கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்

Update: 2022-08-21 17:55 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே வடரெங்கம், வாடிகிராமம், பட்டியமேடு, ஏத்தக்குடி, உச்சிமேடு, பாலுருரான்படுகை, மாதிரவேளூர் ஆகிய கிராமங்களுக்கு இதுவரை பஸ்வசதி இல்லை. இதனால் அந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் வடரங்கத்தில் இருந்து மாதிரவேளூருக்கு முதன் முறையாக நேற்று முன்தினம் அரசு பஸ் இயக்கப்பட்டது. இந்த விழாவடரங்கத்தில் நடந்தது. விழாவுக்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.. தலைமை தாங்கி பஸ்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நாகை அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் (வணிகம்) மகேந்திரன், கிளைமேலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் செல்லசேது ரவிக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பஸ் தினமும் 4 முைற மாதிரவேளூரில் இருந்து வாடிகிராமம், பட்டியமேடு, ஏத்தக்குடி, உச்சிமேடு, பாலுருரன்படுகை கிராமங்கள் வழியாக வடரெங்கத்திற்கு செல்கிறது. முதல் முறையாக பஸ் இயக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்த வடரங்கம் கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், இதுவரை வடரங்கம் கிராமத்தில் இருந்து வாடி, பட்டியமேடு கிராமங்கள் வழியாக மாதிரவேளூருக்கு பஸ் இயக்கப்படவில்லை. தற்போது சாலை மேம்படுத்தப்பட்டு முதல் முறையாக பஸ் இயக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பஸ் இயக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்