அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்;நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலி
அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில், தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில், தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
நிதி நிறுவன ஊழியர்கள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வடபட்டியை சேர்ந்தவர் செல்வகணேஷ் (வயது 30). சிவகாசி சாமிநத்தம் அருகே உள்ள மண்ணுக்குமீட்டான் பட்டியைச் சேர்ந்தவர் சேதுபதி (30). இவர்கள் இருவரும் சிவகாசியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.
நேற்று தங்களது நிறுவன வேலையாக விருதுநகர் வந்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சிவகாசி நோக்கி சென்றனர். மோட்டார் சைக்கிளை செல்வகணேஷ் ஓட்டிச்சென்றார்.
2 பேர் பலி
விருதுநகர்-சிவகாசி ரோட்டில் ஒரு கோவில் அருகே அந்த மோட்டார் சைக்கிள் சென்றது. அப்போது, சிவகாசியில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் செல்வகணேஷ், சேதுபதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆமத்தூர் போலீசார், விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்குப்பதிவு
இந்த விபத்து தொடர்பாக அரசு பஸ் டிரைவரான மல்லி அருகே உள்ள ஆலத்தூரை சேர்ந்த பெரியசாமி (39) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.