கோதையாறில் பள்ளத்தில் பாய்ந்த அரசு பஸ்
கோதையாறில் பள்ளத்தில்அரசு பஸ் பாய்ந்தது.
குலசேகரம்:
கோதையாறில் பள்ளத்தில்அரசு பஸ் பாய்ந்தது.
குலசேகரம் அருகே உள்ள கோதையாறில் இருந்து கன்னியாகுமரிக்கு தடம் எண் 313 இ என்ற அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் நேற்று அதிகாலை 4 மணிக்கு கோதையாறில் இருந்து புறப்பட்டது. சிறிது தூரம் வந்ததும் பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்து நின்றது. இந்த விபத்து நடந்த போது பஸ்சில் டிரைவர், கண்டக்டர் மட்டுமே இருந்தனர். அவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த கோதையாறு புறக்காவல் நிலைய போலீசார் மற்றும் போக்குவரத்து பணிமனை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கிரேன் மூலம் பஸ்சை மீட்டனர். இந்த விபத்தினால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
---