அரசு பஸ் டிரைவர் தற்கொலை முயற்சி
பழனியை அடுத்த கோதமங்கலத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை முயன்றார்
பழனியை அடுத்த கோதமங்கலத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 36). அரசு பஸ் டிரைவர். நேற்று இவர், பழனியில் திண்டுக்கல் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் வைத்து பூச்சிமருந்து (விஷம்) குடித்ததாக தெரிகிறது. சக பணியாளர்கள் அவரை மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே ராஜ்குமார் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து வாட்ஸ்அப்பில் வெளியிட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், பணி வழங்குவதில் அரசு போக்குவரத்து கழக அதிகாரி தன்னை மிரட்டி மன உளைச்சலை ஏற்படுத்துகிறார். எனவே தான் விஷம் குடித்து தற்கொலை செய்ய போகிறேன் என்று கூறியுள்ளார். அரசு பஸ் டிரைவர் தற்கொலை முயற்சித்த சம்பவம் பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது