அரசு பஸ் டிரைவர் பலி
உத்தமபாளையம் அருகே டிராக்டர் மோதியதில் அரசு பஸ் டிரைவர் பலியானார்.;
உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை ஓடை தெருவை சேர்ந்தவர் பவுன்பாண்டி (வயது 54). அரசு பஸ் டிரைவர். நேற்று இவர் மோட்டார் சைக்கிளில் கோம்பையில் இருந்து ராணிமங்கம்மாள் சாலை வழியாக கம்பம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது 18-ம் கால்வாய் புளியந்தோப்பு அருகே எதிரே வந்த டிராக்டர், அவருடைய மோட்டார் சைக்கிள் மீது மோதியது..இதில் பவுன் பாண்டி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி பவுன்பாண்டி பரிதாபமாக இருந்தார். இதுகுறித்து கோம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் ஈஸ்வரனை கைது செய்தனர்.