அரசு பஸ் டிரைவர் திடீர் சாவு

ராஜபாளையத்தில் அரசு பஸ் டிரைவர் திடீரென இறந்தார்.

Update: 2023-09-19 19:59 GMT

ராஜபாளையம்,

தென்காசி மாவட்டம் பெத்தநாடார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கார்மேகன் (வயது 47). அரசு பஸ் டிரைவர். இந்தநிலையில் இவர் நேற்று முன்தினம் தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வரை பயணிகளை ஏற்றிக்கொண்டு ராஜபாளையம் பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை கண்டக்டர் வண்ண முத்துக்குமார் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். இந்தநிலையில் கார் மேகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்