அரசு பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

அரசு பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-23 19:12 GMT

தா.பழூர்:

டிரைவர்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி வடக்கு தெருவை சேர்ந்தவர் சின்னதுரை(வயது 40). அரசு பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 15 ஆண்டுகளாக கும்பகோணம் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக சின்னதுரை வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவருக்கு நாகப்பட்டினம் பணிமனைக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் நாகப்பட்டினம் பணிமனையில் பணியில் சேர்ந்த சின்னதுரை, கடந்த மே மாதம் 6-ந் தேதிக்கு பிறகு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

போலீசார் விசாரணை

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தொங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து தா.பழூர் போலீசில் சின்னதுரையின் மனைவி பாமா கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அழகப்பன் வழக்குப்பதிவு செய்தார். மேலும் சின்னதுரையின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு பணி மாறுதலால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்