17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய அரசு பஸ் டிரைவர் போக்சோ வழக்கில் கைது
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, அரசு பஸ் டிரைவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.;
கடலூர்,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா. அரசு பஸ் டிரைவரான இவருக்கும் ஒரங்கூரைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவிக்கும் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஒன்றரை வருடங்களாக ராஜா வைத்தியநாதபுரத்தில் உள்ள தனது வயலில் உள்ள பம்பு செட்டிற்கு அந்த பெண்ணை அழைத்து சென்று, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தனிமையில் இருந்து வந்துள்ளார்.
இதனால் அந்த பெண் கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணின் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் ராஜா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.