கோட்டகுப்பம் அருகே சாலை தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளான அரசு பஸ் - 15-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்

கோட்டகுப்பம் அருகே சாலை தடுப்பு மீது மோதி அரசு விரைவு பஸ் விபத்துக்குள்ளானது.

Update: 2023-09-23 03:27 GMT

விழுப்புரம்,

அரசு விரைவு பஸ் ஒன்று இன்று காலையில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் கோட்டகுப்பம் அருகே வந்த போது திடீரென பஸ் சாலை தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பஸ்சில் இருந்து 15-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்