பாதியில் நிறுத்தப்பட்ட சமுதாய கூட பணிகள்

தென்கோவனூரில் பாதியில் நிறுத்தப்பட்ட சமுதாய கூட பணிகளை விரைவில் தொடங்கி சமுதாய கூடத்தை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

Update: 2022-12-26 17:58 GMT

கூத்தாநல்லூர்;

தென்கோவனூரில் பாதியில் நிறுத்தப்பட்ட சமுதாய கூட பணிகளை விரைவில் தொடங்கி சமுதாய கூடத்தை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

சமுதாய கூடம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள, தென்கோவனூர் கிராமத்தில், அப்பகுதியில் உள்ள மக்கள் திருமணம், காதணி விழா நடத்தவும்அரசு சார்ந்த நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான கூட்டங்கள் நடத்த சமுதாய கூடம் கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால், பணிகள் தொடங்கி கட்டுமான பணிகள் பாதியிலேயே நிற்கிறது. கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமான பணிகள் பாதியிலேயே நிற்பதால், தற்போது அந்த கட்டிடம் முழுவதும் கருவேல மரங்கள் சூழ்ந்து, காட்டுக்குள் கட்டிடம் மறைந்து இருப்பது போல காட்சி அளிக்கிறது.

சமூக விரோத செயல்கள்

தற்போது இந்த கட்டிடத்தை சமூக விரோதிகள் மது அருந்துவதற்கும், பிற சமூக விரோத செயலுக்கும் பயன்படுத்தி வருகிறார்கள்.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கட்டுமான பணிகளை விரைவில் முடித்து சமுதாய கூடத்ைத பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 

Tags:    

மேலும் செய்திகள்