கோபி மகாமாரியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேக வழிபாடு
கோபி மகாமாரியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேக வழிபாடு நடந்தது.
கடத்தூர்
கோபி புதுப்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் 9-ம் ஆண்டு லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 7 மணி அளவில் தீபாராதனை காட்டப்பட்டது. நேற்று 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி வரிசையில் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் சங்குகளில் இருந்த தீர்த்தத்தை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு வந்து சங்காபிஷேகத்தை பார்த்து, அம்மனை வணங்கினர்.