கூந்தலூர் செட்டியார் தெரு வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டும்
கூந்தலூர் செட்டியார் தெரு வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டும்
குடவாசல் அருகே கூந்தலூர் செட்டியார் தெரு வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கலெக்டருக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 வளைவுகள்
குடவாசல் அருகே பூந்தோட்டம் நாச்சியார் கோவில் வழித்தடத்தில் கூந்தலூர் உள்ளது. கூந்தலூரில் இருந்து கடமங்குடி வரை சாலை குறுகலாகவும், அபாயகரமான வளைவுகள் அதிகமாகவும் உள்ளது.
இந்த வழித்தடத்தில் கும்பகோணத்தில் இருந்து காரைக்கால், மயிலாடுதுறை, எரவாஞ்சேரி, பூந்தோட்டம் ஆகிய ஊர்களுக்கு பஸ்வசதி குறைவாக உள்ளது. ஆனால் இந்த சாலையில் தினமும் ஏராளமான கார், மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. கூந்தலூர் செட்டியார் தெரு வளையில் வேகத்தடை இல்லை. மேலும் இந்த தெருவில் 2 வளைவுகள் உள்ளன.
வேகத்தடை அமைத்து தர வேண்டும்
இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படும் அபாயம் உள்ளன.
எனவே விபத்துகளை தடுக்கும் வகையில் கூந்தலூர் செட்டியார் தெரு வளைவுகளில் உடனடியாக வேகத்தடை அமைத்து தர வேண்டும் என்று கலெக்டருக்கு அந்த பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.