குட்லக் மெட்ரிக்பள்ளியில் போட்டித்தேர்வுகள் குறித்த ஆலோசனை

குத்தாலம் அருகே குட்லக் மெட்ரிக்பள்ளியில் போட்டித்தேர்வுகள் குறித்த ஆலோசனை

Update: 2023-08-31 18:45 GMT

குத்தாலம்:

குத்தாலம் அருகே ஸ்ரீகண்டபுரம் குட்லக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் துறை சார்பில் ஜூனியர் ஐ.ஏ.எஸ். மன்றம் தொடக்கம் மற்றும் ரைஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில் தி பியூச்சர் ஆப் சிவில் சர்வீஸ் என்ற தலைப்பில் சிவில் சர்வீஸ் போட்டி தேர்வுகளை பற்றிய ஆலோசனைகள், பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் ரைஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குனர் ராஜாராமன் கலந்து கொண்டு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு போட்டித்தேர்வுகள் குறித்து கருத்துக்கள் வழங்கினார். மேலும் மாணவ-மாணவிகளிடம் வினாக்களை கேட்டறிந்து அதற்கான விளக்கங்களை அளித்தார். போட்டித்தேர்வுகளை எவ்வாறு கையாள்வது, அதற்கு எந்த வகையில் பயிற்சி மேற்கொள்வது, எந்த வகையான மேற்படிப்பை மேற்கொள்வது, அதற்கான பயிற்சிகள், சிறப்பு வகுப்பு உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் நசீர் அகமது, நிர்வாக இயக்குனர் அகமது தானிஷ், பள்ளி முதல்வர், துணை முதல்வர்கள், கல்வி ஒருங்கிணைப்பாளர்கள், வரலாற்றுத்துறை ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்