புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
வல்லம் தூய பவுல் ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
பிள்ளையார்பட்டி;
வல்லம் தூய பவுல் ஆலயத்தில் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தென்னிந்திய திருச்சபை திருச்சி தஞ்சை திருமண்டலம் தூய அந்திரேயாஆலய சேகரத்துக்கு உட்பட்ட வல்லம் தூய பவுல் ஆலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு மும்மணி தியானம் நடந்தது. இதில் ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட போது அவர் பேசிய 7 வார்த்தைகள் பற்றி தியானம் செய்யப்பட்டது. இதில் சபை சார்லிபன் சாந்தகுமார் சிறப்பு பிரார்த்தனை செய்தார். பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.