போலீஸ் தாக்கியதில் பொற்கொல்லர் உயிரிழந்ததாக வழக்கு; தமிழக அரசு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவு

பொற்கொல்லர் சுப்பிரமணியன் உயிரிழப்புக்கு போலீசார் எந்த வகையிலும் காரணமாக முடியாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.;

Update: 2023-11-09 14:53 GMT

மதுரை,

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் சுப்பிரமணியன் என்பவரது மனைவி சாந்தி, மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2017-ம் ஆண்டு தனது கணவர் மற்றும் மகனை போலீசார் சந்தேகத்தின்பேரில் அழைத்துச் சென்றதாகவும், போலீஸ் தாக்கியதில் தனது கணவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பொற்கொல்லர் சுப்பிரமணியன் உயிரிழப்புக்கு போலீசார் எந்த வகையிலும் காரணமாக முடியாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, மனுதாரரின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.18 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்