பொன்விழா ஆண்டு கால்பந்து போட்டி

பொன்விழா ஆண்டு கால்பந்து போட்டி நடைபெற்றது.

Update: 2022-10-15 18:48 GMT

அருப்புக்கோட்டை, 

மதுரை காமராஜர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், ஆசிரியர் சங்கமான மூட்டா சங்கத்தின் பொன்விழா ஆண்டு, பொன்விழா மாநாட்டையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் கால்பந்து போட்டி தொடக்க விழா நடைபெற்றது. தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட கல்லூரிகளை சேர்ந்த 8 அணிகள் கலந்து கொண்டன. தொடக்க விழாவிற்கு ஞானேஸ்வரன் தலைமை வகித்தார். பேராசிரியர் கோபால் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நகர்மன்றத்தலைவர் சுந்தரலட்சுமி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் பாண்டியராஜன், பொறுப்பாளர்கள் செந்தாமரைக்கண்ணன், பெரியசாமி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பு அமைப்பாளர்கள் செந்தில்குமார், உடற்கல்வி இயக்குனர் ஹரிகிருஷ்ணன் செய்திருந்தனர். முடிவில் பேராசிரியை உமாராணி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்