ஓடும் பஸ்சில் 2½ பவுன் நகை பறிப்பு

தஞ்சையில் ஓடும் பஸ்சில் 2½ பவுன் நகையை பறித்து சென்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2022-11-25 20:15 GMT

தஞ்சாவூர்;

திருவாரூர் மாவட்டம் அரித்துவாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வேதவள்ளி. இவர் அரித்துவாரமங்கலத்தில் இருந்து தஞ்சை நோக்கி அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். அந்த பஸ் தஞ்சையை அடுத்த மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது வேதவள்ளியின் கழுத்தில் கிடந்த 2½ பவுன் சங்கிலியை 2 பெண்கள் சட்டென்று பறித்தனர். இதனை அறிந்து அந்தபெண் கத்தி கூச்சலிட்டார். உடனே சுதாரித்துக் கொண்ட மற்ற பயணிகள் 2 பெண்களையும் பிடித்து பஸ்சில் இருந்து கீழே இறக்கினர். பின்னர் அவர்களை தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.பிடிப்பட்ட பெண்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த மாரி மனைவி முத்து(வயது 32), அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மனைவி தேவயானி(25) என்பது தெரியவந்தது. இது குறித்து தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் வேதவள்ளி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவயானி, முத்து ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்