வீடு புகுந்து 11½ பவுன் நகைகள் திருட்டு

தஞ்சையில் வீடு புகுந்து 11½ பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-05-23 22:21 GMT

தஞ்சாவூர்;

தஞ்சையில் வீடு புகுந்து 11½ பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

11½ பவுன் நகைகள் திருட்டு

தஞ்சை மானோஜிப்பட்டி குமார் போஸ்டல் காலனியை சேர்ந்தவர் மதியழகன். விவசாயி. இவருடைய மனைவி மகாராணி (வயது 55). இவர் நேற்றுமுன்தினம் வீட்டை பூட்டிவிட்டு தஞ்சையில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்த திருமண விழாவுக்கு சென்றார். திருமணம் முடிந்த பிறகு அவர் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பிரோ உடைக்கப்பட்டு, பொருட்கள் எல்லாம் அறையில் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் இருக்கிறதா? என மகாராணி தேடி பார்த்தபோது, நகைகளை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து 11½ பவுன் நகைகளை திருடிச்சென்றுவிட்டனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்திற்கு மகாராணி தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கதவு, பீரோ, சுவர்களில் பதிவான ரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர்.மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் திருடர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த திருட்டு குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்