20 பவுன் நகை திருட்டு; வேலைக்கார பெண் கைது

கும்பகோணத்தில் வீட்டில் 20 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-03 20:00 GMT

கும்பகோணம்;

கும்பகோணத்தில் தாழிலதிபர் வீட்டில் 20 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

நகைகள் திருட்டு

கும்பகோணம் காடுவெட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர். தொழிலதிபர். இவருடைய மனைவி பேபிலலிதா(வயது42). இவர் அப்பகுதியில் மறுவாழ்வு மையம் வைத்து நடத்தி வருகிறார்.இவரது வீட்டில் கும்பகோணம் மாதுளம் பேட்டை தெருவை சேர்ந்த சதீஷ்குமார் மனைவி இலக்கியா(31) வீட்டு வேலை செய்து வந்தார். சிவசங்கர் குடும்பத்துக்கு இலக்கியா நம்பிக்கையான நபராக இருந்தார்.இந்தநிலையில் கடந்த மாதம் (ஆகஸ்ட்) 26-ந் தேதி பேபிலலிதா வீட்டில் இருந்து 20 பவுன் நகைகள் திருட்டு போனது.

விசாரணை

இதுகுறித்து பேபிலலிதா கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தினர். விசாரணையின் போது சிவசங்கர் வீட்டில் வேலை பார்த்த இலக்கியாவின் நடவடிக்கையை அவருக்குத் தெரியாமல் போலீசார் கண்காணித்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது இலக்கியா, சிவசங்கர் வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது.

கைது

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இலக்கியா, 20 பவுன் நகைகளை சிவசங்கர் வீட்டில் இருந்து திருடியது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் நேற்று இலக்கியா வீட்டில் சோதனை செய்தனர். சோதனையில் பேபி லலிதா வீட்டில் திருடப்பட்ட 20 பவுன் நகைகளையும் இலக்கியா அவரது வீட்டில் மறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து நகைகளை மீட்டனர். மேலும் இலக்கியாவை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்