பெண்ணிடம் 15 பவுன் நகை திருட்டு
தஞ்சை அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 15 பவுன் நகையை திருடி சென்ற மா்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
வல்லம்;
தஞ்சை அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 15 பவுன் நகையை திருடி சென்ற மா்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
15 பவுன் நகை திருட்டு
தஞ்சை மாவட்டம் திருக்கானூர்பட்டி தேவாரம் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி கவுசல்யா(வயது62).இவர் தனது கணவருடன் திருச்சியிலிருந்து தஞ்சைக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது கவுசல்யா தனது கைப்பையில் 15 பவுன் நகையை வைத்திருந்தார்.வல்லம் மின்நகர் பகுதியில் பஸ்சில் இருந்து இறங்க கவுசல்யா எழுந்த போது அவர் 15 பவுன் நகை வைத்திருந்த பையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
போலீசில் புகார்
இதனால் அதிர்ச்சி அடைந்த கவுசல்யா வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைப்பையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.