வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை திருட்டு

தஞ்சை அருகே வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-09-02 20:27 GMT


தஞ்சையை அடுத்த மாரியம்மன் கோவில் ரமணா நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிகுமார் மனைவி மோனிகாஸ்ரீ (வயது 30). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு பெங்களூருவுக்கு சென்றார். இந்த நிலையில் இவருடைய வீடு திறந்து இருப்பதாக வீட்டின் அருகில் உள்ளவர்கள் மோனிகாஸ்ரீக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் ஊருக்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு, பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு மோனிகாஸ்ரீ அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன.மேலும் அதில் இருந்த 5 பவுன் நகைகளை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் பூட்டை உடைத்து பவுன் நகையை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, தாலுகா போலீஸ் நிலையத்தில் மோனிகாஸ்ரீ புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள், வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்