ஆரணி அரசு மருத்துவமனையில் மார்ச் 1-ந் தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

ஆரணி அரசு மருத்துவமனையில் மார்ச் 1-ந் தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

Update: 2023-03-03 17:16 GMT

ஆரணி அரசு மருத்துவமனையில் மார்ச் 1-ந் தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் மார்ச் 1-ந் தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி தெரிவித்து இருந்தார். அதன்படி ஆரணி அரசு மருத்துவமனையில் கடந்த 1-ந் தேதி களம்பூர் பகுதியைச் சேர்ந்த நிஷா - அசோக்குமார் தம்பதியருக்கு 2-வது பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு தங்க மோதிரத்தை தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் அணிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பூக்கடை எம்.பிரகாஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.புஷ்பராஜ், ஒன்றிய செயலாளர் வக்கீல் எம்.சுந்தர், துரை மாமது, எஸ்.மோகன், முன்னாள் எம்.எல்.ஏ. தயாநிதி உள்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகள் அனைவருக்கும் பழங்கள், ரொட்டி வழங்கினர்.


Tags:    

மேலும் செய்திகள்