அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
கருணாநிதி பிறந்த நாளையொட்டி அரசு ஆஸ்பத்திரிகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
அச்சன்புதூர்:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாைளயொட்டி, கடையநல்லூரில் உள்ள வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினார். கம்பனேரி ஊராட்சியில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை கடையநல்லூர் யூனியன் தலைவர் சுப்பம்மாள் பால்ராஜ் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் சேக்தாவூது, ஒன்றிய செயலாளர் ராமையா, கடையநல்லூர் நகரசபை தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், செங்கோட்டை நகர செயலாளர் ரஹீம், நகர்மன்ற துணைத்தலைவர் ராசையா, தென்காசி யூனியன் தலைவர் சேக் அப்துல்லா, கடையநல்லூர் யூனியன் துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ், மாவட்ட கவுன்சிலர்கள் பூங்கொடி, மதிமாரிமுத்து, செங்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் ராஜேஸ்கண்ணன், சித்த மருத்துவா் கலா, டாக்டா் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.