தங்கம் விலை கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 உயர்ந்தது
சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2.50 உயர்ந்துள்ளது.;
சென்னை,
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில், இன்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.46,560-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.5,820-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2.50 உயர்ந்து ரூ.79.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.