தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 உயர்வு: நகை பிரியர்கள் அதிர்ச்சி

தங்கம் விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

Update: 2024-03-21 04:06 GMT

சென்னை,

தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது. அதிலும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை நோக்கி பயணித்தது. சவரன் ரூ.48 ஆயிரம், ரூ.49 ஆயிரம் என்ற நிலையை கடந்து விற்பனை ஆனது.

தொடர்ந்து 10 நாட்களாக விலை அதிகரித்து, கடந்த 13-ந் தேதி விலை குறைந்து காணப்பட்டது. இதனால் தங்கம் விலை ரூ.49 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. மீண்டும் மறுநாள் (14-ந் தேதி) விலை அதிகரித்தும், அதற்கு அடுத்த நாள் (15-ந் தேதியில்) முதல் அதன் விலை சரியத்தொடங்கியது. தொடர்ந்து சில நாட்களாக விலை குறைந்து வந்த நிலையில், மீண்டும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு நேற்று ரூ.40 உயர்ந்து ரூ.49,120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்தநிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.49,880க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலைகிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.6,235க்கு விற்பனையாகிறது.

சென்னையில் வெள்ளி விலை 1.50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ.81.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் வரலாறு காணாத வகையில் உயர்ந்து ரூ.50 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக அவ்வப்போது குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்