தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு.!
வெள்ளியின் விலையும் அதிகரித்து உள்ளது.;
சென்னை,
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கடந்தசில நாட்களாக அதிகரித்து வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44 ஆயிரத்து 520க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5 ஆயிரத்து 565க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் அதிகரித்து உள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் அதிகரித்து ரூ.76.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.