தங்கப்பதக்கம் வென்ற வேதாரண்யம் அரசு கல்லூரி மாணவி

பாரதிதாசன் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் தங்கப்பதக்கம் வென்ற வேதாரண்யம் அரசு கல்லூரி மாணவி

Update: 2023-08-17 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவி ஜோதிகா பாரதிதாசன் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் இதே பிரிவில் புவனேஸ்வரி என்ற மற்றொரு மாணவி 11-ம் இடத்தை பெற்றுள்ளார். இதையடுத்து தங்கப்பதக்கம் பெற்ற மாணவி ஜோதிகாவுக்கு கல்லூரியில் பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் காமராஜ் தலைமை தாங்கி, பதக்கம் பெற்ற மாணவிக்கு புத்தகத்தை பரிசாக வழங்கினார். துணை முதல்வர் குமரேசமூர்த்தி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்