சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வடமாநில இளைஞரிடமிருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.;

Update: 2023-08-14 14:16 GMT

சென்னை,

நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒட்டு மொத்த நாடும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருப்புப்பாதை போலீசார் சோதனை செய்த போது, நவஜீவன் விரைவு வண்டியில் பயணம் செய்து வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மஹேந்தர் சைனி என்பவரின் உடைமையை சோதனை செய்ய முற்பட்டனர்.

அவர் சோதனை செய்வதற்கு மறுத்த நிலையில் அவரை இருப்புப்பாதை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது பெட்டியை திறந்து பார்த்ததில் அவர், உரிய ஆவணமின்றி ரூ.1.5 கோடி மதிப்பிலான 2.6 கிலோ எடையுள்ள தங்க நகைகள், வைர கம்மல் ஆகியவற்றை எடுத்து வந்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து உடனடியாக இது தொடர்பாக நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்களிடம் அந்த நபர் ஒப்படைக்கப்பட்டார்.


Tags:    

மேலும் செய்திகள்