வாடிக்கையாளர்கள் போல் நடித்து நகை கடையில் தங்க சங்கிலி திருட்டு: தாய்-மகள் கைது

சென்னையை அடுத்த மாதவரத்தில் வாடிக்கையாளர்கள் போல் நடித்து நகை கடையில் தங்க சங்கிலி திருடிய தாய் மற்றும் மகளை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-07-30 12:01 IST

சென்னையை அடுத்த மாதவரம் மூலக்கடை பகுதியில் நகை கடை நடத்தி வருபவர் முகமது நசீர் (வயது 56). கடந்த 21-ந்தேதி இவரது கடைக்கு மாதவரத்தை அடுத்த பொன்னியம்மன்மேடு ராம்நகர் பகுதியைச் சேர்ந்த ஷர்மிளா(43), தனது மகள் ஜெயஸ்ரீ(24), மகன் சசிதரன்(21) ஆகியோருடன் வாடிக்கையாளர்போல் வந்தார். பின்னர் நகை வாங்குவதுபோல் நடித்து 3 பேரும் சேர்ந்து 2 பவுன் தங்க நகையை திருடிச்சென்றுவிட்டனர்.

அவர்கள் சென்ற பிறகு முகமது நசீர், கடையில் இருந்த நகைகளை ஆய்வு செய்தார். அப்போது 2 பவுன் தங்கச்சங்கிலி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தார்.

அதில், ஷர்மிளா உள்பட 3 பேரும் நகையை திருடும் காட்சி பதிவாகி இருந்தது. இதுபற்றி முகமது நசீர் அளித்த புகாரின்பேரில் மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் ஷர்மிளா, மகள் ஜெயஸ்ரீ, மகன் சசிதரன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 பவுன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்