கத்தியை காட்டி மிரட்டி சங்கிலி பறிப்பு

மாநகராட்சி ஒப்பந்த ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி சங்கிலி பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-27 22:39 GMT

தஞ்சாவூர்;

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே அம்மனி சத்திரம் பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் ராஜராஜன்(வயது29). இவர் தஞ்சை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள பொருட்களை மர்மநபர்கள் திருடி செல்வதாக ராஜராஜனுக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில் ராஜராஜன் பள்ளியக்கிரஹாரம் நீரேற்றும் நிலையம் அருகே சோதனை மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியில் 2 பேர் மது குடித்து கொண்டிருந்தனர். அவர்களிடம் ராஜராஜன் இங்கு அமர்ந்து மதுகுடிக்க கூடாது என்று கூறினார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் ராஜராஜனை கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்து இருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்து ராஜராஜன் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தஞ்சை பள்ளியக்கிரஹாரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அமல்ராஜ் மகன் கருப்பாண்டி என்ற விமல்ராஜ்(26), அதே பகுதி அண்ணாநகரை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் பிரகாஷ்(26) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்