திண்டிவனத்தில் நர்சிடம் தங்க சங்கிலி பறிப்பு
திண்டிவனத்தில் நர்சிடம் தங்க சங்கலி பறித்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்,
திண்டிவனம் தென்றல் நகரை சேர்ந்தவர் முனுசாமி(வயது 64). ஓய்வுபெற்ற அரசு கண்டக்டர். இவருடைய மனைவி மல்லிகா(60). நர்ஸ். இவர்கள் இருவரும் ஒரு மொபட்டில் திண்டிவனத்தில் இருந்து கீழ் காரனை சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.
கர்ணாவூர்பேட்டை சாலையில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென மல்லிகாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிசென்றனர்.இதுகுறித்த புகாரின்பேரில் திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி நகையை பறித்து சென்ற மர்மநபர்கள் 2 பேரை தேடி வருகின்றனர்.திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகிலே பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.