மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

Update: 2022-06-28 17:17 GMT

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் மூ.வாகைகுளம் சேர்ந்தவர் வேலம்மாள்(வயது 75). இவர் வீட்டின் திண்ணையில் படுத்திருந்தார். அப்போது வேலம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை அடையாளம் தெரியாத நபர் பறித்ததார். இதனால் கண்விழித்த வேலம்மாள் சங்கிலியை இறுக பிடித்துக் கொண்டு சத்தம் போட்டுள்ளார். இதனால் பாதி தங்கச்சங்கிலியை அறுத்து கொண்டு அந்த நபர் தப்பி விட்டார். இச்சம்பவம் குறித்து முதுகுளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்