4 கிராம் தங்கம் -பணம் திருட்டு
தஞ்சை அருகே கடையின் பூட்டை உடைத்து 4 கிராம் தங்கம் -பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூர்;
தஞ்சை மேம்பாலம் பகுதியை ராஜா (வயது 55). இவர் மேம்பாலத்தின் கீழே குளிர்சாதன பெட்டி பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதைக் கொண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து கடையின் உள்ளே சென்று பார்த்த போது அலமாரியில் இருந்த 4 கிராம் தங்க டாலர்களை காணவில்லை. மேலும் கல்லாவில் இருந்த ரூ.3 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர். இது குறித்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் ராஜா புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த ஸ்ரீதர் (30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.