ஆழ்வார்திருநகரிஈசான உச்சினிமாகாளி அம்மன் கோவில் வருசாபிஷேக விழா
ஆழ்வார்திருநகரிஈசான உச்சினிமாகாளி அம்மன் கோவில் வருசாபிஷேக விழா நடந்தது.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி ஈசான உச்சினிமாகாளி அம்மன் கோவில் வருசாபிஷேக விழா நேற்று நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு நேற்று கோவிலில் அதிகாலையில் விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம் நடந்தது. அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 9.30 மணி முதல் சிறப்பு அபிஷேக பூஜைகள், 108 சங்காபிஷேகம், காலை 10.30 மணிமுதல் 11.30 மணிக்குள் யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்து. பகல் 12 மணிக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.