பிறைகுடியிருப்பு தேவி ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் கொடைவிழா

பிறைகுடியிருப்பு தேவி ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் கொடைவிழாவில் அம்மன் சிம்ம வாகனத்தில் அருள்பாலித்தார்.

Update: 2023-09-06 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி அருகேயுள்ள பிறைக்குடியிருப்பு தேவிஸ்ரீ முத்தாரம்மன், ஸ்ரீமகாமாரியம்மன், ஸ்ரீ பத்ரகாளியம்மன், ஸ்ரீ உஜ்ஜைனிமகாளி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 3-ந்தேதி இரவு 7 மணிக்கு மாகாப்பு அலங்காரத்துடன் அம்மன் அருள்பாலித்தார். மறுநாள் காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 9 மணிக்கு கோவில் முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு பலவேறுபூஜைகள், வில்லிசை, கும்பம் தெரு வீதி வருதல் நடந்தது. காலை 7 மணிக்கு பால் பூஜை, மாலை 6 மணிக்கு அம்மன்கள் மஞ்சள் நீராடுதல் நடந்தது. நள்ளிரவு ஒரு மணிக்கு சிறப்பு பூஜையுடன் அம்மன் சிம்மவாகனத்தில எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். நாளை(வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு கொடைவிழா நிறைவு பூஜையுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்