வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் ஊர்வலம்
கன்னியாகுமரி கோவிலில் வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் ஊர்வலம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 11.30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி, தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி, மதியம் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் போன்றவை நடைபெற்றது.
மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு சிறப்பு பக்தி இன்னிசை கச்சேரி, 9 மணிக்கு வணிகவரித்துறை சார்பில் வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி யானை ஊர்வலத்துடன் கோவிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றி 3 முறை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.