உடன்குடி கொட்டங்காடு தேவி பத்திரகாளி அம்மன் கோவில் விழா
உடன்குடி கொட்டங்காடு தேவி பத்திரகாளி அம்மன் கோவில் விழா நடைபெற்றது.
உடன்குடி:
உடன்குடி கொட்டங்காடு தேவி பத்திரகாளி அம்மன் கோவிலில் ஆடி மங்களசுபகிருது விழா நடந்தது.
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு பவளமுத்து விநாயகர் மற்றும் அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு ஆபிஷேகம், 7 மணிக்கு ஆபிஷேக தீபாராதனை, காலை 8 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. பகல் 1 மணிக்கு சிறப்பு கூழ்படையல் பூஜை, பக்தர்களுக்குகூழ் வழங்கல், இரவு 7 மணிக்கு நாடு நலம் பெற வேண்டி 108 திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு சிறப்புஅலங்கார தீபாராதனை, இரவு 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் கோவில் கோட்டைக்குள் சப்பர பவனியும், தொடந்த அம்மன் ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது.