அம்மன் சிலை சேதம்்; தொழிலாளி மீது வழக்கு

அம்மன் சிலை சேதம்்; தொழிலாளி மீது வழக்கு ப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-04-15 18:58 GMT

துறையூரை அடுத்த கரட்டாம்பட்டி ஊராட்சி மேலூர் கிராமத்தில் அம்மன் கோவில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி கோவிலின் கதவை உடைத்து புகுந்த அதே ஊரை சேர்ந்த கூலி தொழிலாளி பாக்கியராஜ் (வயது 37) என்பவர் மாரியம்மன் சிலையை உடைத்து சேதப்படுத்தி உள்ளார். இதை கண்ட கிராம மக்கள் அவரை பிடித்தனர். ஆனால் அவர் மதுபோதையில் இருந்ததை தொடர்ந்து கிராம மக்கள் அவரை விடுவித்தனர். இது தொடர்பாக ஊர் முக்கியஸ்தர் துரைசாமி புலிவலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்