குழந்தை பாக்கியம் அருளும் அங்காளபரமேஸ்வரி அம்மன்

குழந்தை பாக்கியம் அருளும் அங்காளபரமேஸ்வரி அம்மன் குடமுழுக்கு

Update: 2022-09-04 17:42 GMT

மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளத்தில் கோவில் கொண்டுள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மனை வழிபட்டால் குழந்தை பேரு நிச்சயம் என்பது ஐதீகம். அதன்படி கோவில் குளத்தில் நீராடி அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட வேண்டும். இதைப்போல நோய் நொடிகளை நீக்கும் சக்தி மிக்க தெய்வமாக அங்காள பரமேஸ்வரி அம்மன் விளங்குகிறாா். எனவே தான் பக்தர்கள் தங்களுடைய கஷ்டங்களைப் போக்க அங்காள பரமேஸ்வரியை வழிபட்டு செல்கிறார்கள்.

இந்த உலகில் அனைத்து சக்திக்கும் ஆதியும் அந்தமும் ஆன அன்னை ஆதிபராசக்தி எத்தனையோ அவதாரம் எடுத்து அரக்கர்களையும், அதர்மத்தையும் அழித்து மக்களையும் மற்ற உயிர்களையும் காத்து வருகின்றாள். ஆனால் இறைவனை காக்க இறைவி எடுத்த அவதாரமே அங்காள பரமேஸ்வரி அம்மன் அவதாரம். இந்த அம்மன் தமிழகமெங்கும் அங்காளம்மன், அங்காளபரமேஸ்வரி, என்று பல பெயர்களில் மக்களால் வணங்கப்பட்டு வருகிறாள்.இந்த கோவில் குடமுழுக்கு நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்