பழனி ஆண்டவர் கோவிலில் கோடாபிஷேக விழா

கும்பகோணம் பழனி ஆண்டவர் கோவிலில் கோடாபிஷேக விழா நடந்தது.

Update: 2023-05-18 20:04 GMT

கும்பகோணம்:

கும்பகோணம் பழனி ஆண்டவர் தெருவில் பழனி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் முருகர் பால தண்டாயுதபாணியாக நின்ற நிலையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் கோடாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 16-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட ஊர்வலம் நேற்று நடந்தது. முன்னதாக காலை காவிரி ஆற்றின் பகவத் படித்துறையில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டு முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். தொடர்ந்து முருகன் பால தண்டாயுதபாணிக்கு மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் தெரு மக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்