கோபி தாலுகா-ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கோரிக்கை அட்டையுடன் பணிபுரிந்த ஊழியர்கள்

கோபி தாலுகா-ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கோரிக்கை அட்டையுடன் ஊழியர்கள் பணிபுரிந்தனா்.

Update: 2023-09-20 21:31 GMT

கடத்தூர்

கோபி தாலுகா அலுவலகம் மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பணி புரியும் வருவாய் துறை ஊழியர்கள் 40 பேர் நேற்று கோரிக்கை அட்டை அணிந்தபடி பணி புரிந்தனர்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பணிக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும், ஊழியர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய வாசகங்கள் ஊழியர்கள் அணிந்திருந்த கோரிக்கை அட்டையில் இடம்பெற்று இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்