கோபி ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரிபொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

கோபி ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்..

Update: 2023-09-30 22:09 GMT

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கோபி ஆர்.டி.ஒ அலுவலகத்தின் முன்பு வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாநில பொதுச் செயலாளர் சுகந்தி தலைமை தாங்கினார். போராட்டத்தில் வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் அந்தியூர், சத்தியமங்கலம் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்