கோபி, நம்பியூரில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோபி, நம்பியூரில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோபி, நம்பியூரில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோபி
மணல் கொள்ளையை தடுக்க சென்றபோது திருச்சி மாவட்டம் துறையூர் உள்வட்ட வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் தாக்கப்பட்டார். இதை கண்டித்து கோபி தாலுகா அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். கிராம உதவியாளர்கள் சங்க மாநில தலைவர் ராஜசேகரன், கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பழனிச்சாமி, கோபி வருவாய்த்துறை அலுவலர் சங்க தலைவர் கோபாலன், செயலாளர் செல்விநாயகம், பொருளாளர் கவிதாஞ்சலி உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
நம்பியூர்
துறையூரில் வருவாய் ஆய்வாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதை கண்டித்து நம்பியூரிலும் வருவாய்த்துறையினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்துக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க நம்பியூர் வட்ட தலைவர் ரகு தலைமை தாங்கினார். இதில் வருவாய்த்துறையினர் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.