செஞ்சி வாரச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையையொட்டி செஞ்சி வாரச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

Update: 2023-06-23 18:45 GMT

செஞ்சி, 

செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். பண்டிகைகாலங்களில் இங்கு ஆடுகள் வாங்க உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் வருகிற 29-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குர்பானி கொடுப்பதற்காக, முஸ்லிம்கள் அதிக அளவில் ஆடுகளை வாங்குவது வழக்கம்.

இதையொட்டி நேற்று செஞ்சி வாரச்சந்தையில் ஆடு விற்பனை களைகட்டியது. அதிகாலையிலேயே ஆடுகளை வளர்ப்பவர்கள் தங்களின் ஆடுகள் மற்றும் மாடுகளை அதிக அளவில் ஆட்டுச்சந்தைக்கு கொண்டு வந்திருந்தனர். ஏராளமான முஸ்லிம்கள் மற்றும் ஆட்டு வியாபாரிகள் இந்த ஆடுகளை போட்டி போட்டு காலை முதலே வாங்கத்தொடங்கினர்.

இதில் குர்பானி ஆடுகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையும், பெரிய தனி ஆடு அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் வரையும் விலை போனது. நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் ரூ.6 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த ஆட்டுச்சந்தையில் வாங்கிய ஆடுகளை சரக்கு வாகனங்களிலும், இருசக்கர வாகனங்களிலும் வைத்து கொண்டு சென்றதை காணமுடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்