ஆடு திருடியவர் கைது

ஆடு திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-26 15:53 GMT

திருவட்டார்:

திருவட்டார் அருகே உள்ள குட்டக்குழியை சேர்ந்தவர் தனசேகர் (வயது51). இவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் பின்புறம் ஆடுகள் சத்தமிட்டன. உடனே, தனசேகர் வெளியே வந்து பார்த்த போது குட்டக்குழி வட்டவிளையை ேசர்ந்த டேவிட் ராஜ் (32) என்பவர் ஒரு ஆட்டை திருடி மோட்டார் சைக்கிளில் கொண்டு போவதை பார்த்தார். இதுகுறித்து தனசேகர் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராம் வழக்குப் பதிவு செய்து டேவிட் ராஜை கைது செய்தார். அவரிடம் இருந்து ஆடு மீட்கப்பட்டது. பின்னர் டேவிட்ராஜ் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

-

Tags:    

மேலும் செய்திகள்