ஆடு திருட்டு

காரியாபட்டி அருகே ஆட்ைட திருடி சென்றனர்.

Update: 2023-06-16 20:25 GMT

காரியாபட்டி, 

நரிக்குடி அருகே உள்ள தச்சனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வேந்திரன் (வயது 53). இவர் சொந்தமாக ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆடுகளை மேய்த்து விட்டு வீட்டின் முன்பு தனது ஆடுகளை கட்டினார். பின்னர் அவர் ஆடல், பாடல் நிகழ்ச்சி பார்ப்பதற்காக சென்றார். இதையடுத்து இரவு 11 மணிக்கு திரும்ப வந்து ஆடுகளை பார்த்தபோது அதில் ஒரு ஆட்டை மட்டும் மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து தெய்வேந்திரன் அளித்த புகாரின் பேரில் அ.முக்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்