பட்டப்பகலில் ஆடு திருடும் கும்பல்: சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு

பட்டப்பகலில் ஆடு திருடும் கும்பல்: சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு.

Update: 2022-10-07 20:49 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் குறிச்சி, செம்படாபாளையம், கல்பாவி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பட்டப்பகலில் ஆடுகள் திருட்டு போவதாக அந்த பகுதி பொதுமக்கள் போலீசில் புகார் செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த வாரம் செம்படாபாளையத்தை சேர்ந்த அழகு என்பவரின் வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடு ஒன்று திருட்டு போனது. இதுகுறித்து அவர் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் ஆட்டை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதனிடையே ஆட்டை மர்ம நபர்கள் மோட்டார்சைக்கிளில் திருடி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்