பொம்மிடி அருகே வடசந்தையூரில்ரூ.24 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

Update:2023-09-29 00:30 IST

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி அடுத்த வடசந்தையூரில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், உள்ளிட்ட மாவட்ட வியாபாரிகளும், உள்ளூர் விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் 500-க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். நேற்று நடைபெற்ற சந்தையில் 10 கிலோ எடை கொண்ட ஆடு 7 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானது. தற்போது புரட்டாசி மாதம் என்பதால் ஆடுகள் வாங்க வியாபாரிகள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்தது. நேற்று நடைபெற்ற சந்தையில் 24 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்

Tags:    

மேலும் செய்திகள்