புதுச்சேரி மாநிலம், தட்டாஞ்சாவடி கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 41). டிரைவரான இவர் ஒரு சரக்கு வாகனத்தில் 80 ஆடுகளை ஏற்றி வந்தார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, அந்த சரக்கு வாகனத்தின் பின்பக்க டயர் வெடித்தது. இதில் சரக்கு வாகனம் சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வெங்கடேசன் காயமின்றி உயிர் தப்பினார். 80 ஆடுகளில் ஒரு ஆடு மட்டும் செத்தது. மேலும் இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த மங்களமேடு போலீசார், விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர்.